
நான் ஒரு
ராசி-இல்லாமனிதன் ....
எதற்க்கும் ராசி -
இல்லாஒரு ஜென்மம்.....
அம்மாவிடம் சாப்பிட ஆசைப்பட்டேன் -
ஆனால்கிடைக்கவில்லை
அப்பாவின்சொல்லுக்கு -
அடங்கிபோக விரும்பினேன் -
ஆனால் முடியவில்லை...
அண்ணாவோடு
கை கோர்த்து
நடக்க ஆசைபட்டேன் -ஆனால்
அவன் சிதறி போனான்.....
உன் அன்பில் -என்
கவலைகள் எல்லாம் -மறந்து
சில மாதங்கள்
வசந்த காலத்தில் வாழ்தேன் -
ஆனால் அதற்க்கும்
ஆயுள் -நீளமில்லைஎன்று
தூது விட்டாய்........
இருந்தும் -நான்
போரிட நிணைத்தேன் -ஆனால்
உன் உயிரான உறவின் -நிலை
என்னை ஊமையாக்கி-ஒரு
மூலைக்குள்
முடங்கி இருக்க வைகின்றது...............
ஆனாலும் நான்
உன் நிணைவுகளோடு -
என் ஜீவன் உள்ள
காலம் வரை கனவுகளோடு -
நான் வாழ்வது உறுதி......









