சனி, 16 ஜனவரி, 2010

வலிக்கின்றது.........


வலிக்கின்றது -
என்நெஞ்சுக்குள்
முள்குத்துவதாய் வலிக்கின்றது......
தட்டச்சில்
எழுத்துக்கள் பதிக்க
முடியவில்லை-
என் கண்ணீர் கண்னை
மறைக்கின்றது........
யாரோ என்
மனதுக்குள் கைவிட்டு
பிசைவதாய் -
நான் உணர்கின்றேன்.........
வலிக்கின்றது
ஆனால்
வெளியே சொல்ல
முடியவில்லை இந்த
வலிகளைவிட -
எனக்கு மரணம்
சுலபமாய் இருக்கும்.......
ஆனால்
நீ
என்னிடம் பெற்றுக் கொண்ட
சத்தியம் அதற்க்கும்
வழி விட வில்லை..........
ஆனால் இனி வலிகளில் -
நான் மரணித்துப்போவேன்.........

கருத்துகள் இல்லை: